பக்கங்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2022

எலிகளுக்கு வந்த சோதனையும் நீதிபதிகள் அடைந்த வேதனையும்

 


இன்றைய சுவாரஸ்யமான செய்தி:-🐀🐁🐀.

உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் 2018-19ம் ஆண்டுகளில் போலீசார் நடத்திய வேட்டையில் 581கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.. கைப்பற்றப்பட்ட கஞ்சாவை 2போலீஸ் ஸ்டேஷகளில் உள்ள குடோன்களில் வைத்திருந்தனர்.. இந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..சரி விசயத்திற்கு வருவோம்..

இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் நீதிபதி சமர்ப்பிக்க சொன்னால் அதை எலிகளும் சுண்டெலிகளும் சாப்பிட்டு விட்டது என்று போலீசார் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பதில் அளித்து உள்ளதை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்து விட்டார்.. வடிவேலு காமெடியில் சொல்ல வேண்டும் என்றால் #ஏதே என்ற நீதிபதியின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கும் கேட்கிறதா?

சரி சரி 581கிலோ கஞ்சாவை அப்படி எலி சாப்பிட்டதற்கான ஆதாரத்தை வழக்கு விசாரணைக்கு வரும் 26ம்தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..

கொசுறு செய்தி:-இதே உத்திர பிரதேச மாநிலத்தில் எடாவா மாவட்டம் கோட்வலி போலீசாரால் கைப்பற்றப்பட்ட 35லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1400பெட்டிகளில் இருந்த மதுவை எலிகள் குடித்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்..இது தொடர்பாக மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

பின் குறிப்பு:-ஏன்டா எங்களுக்கு சாட்சி சொல்ல முடியாது என்பதற்காக இன்னும் எத்தனை எத்தனை பழிகளை என் மீது சுமத்துவீர்கள்.. நீதிபதி ஐயா இப்படிப்பட்டவர்களுக்கு அப்பாவிகள் மீது வீண் பழி சுமத்தியதற்கான வழக்கையும் சேர்த்து போடுங்கள் ஐயா என்று சொல்லும் எலிகளின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறதா..🏃🐀🐁🐀.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக