பக்கங்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

நான் சிருஷ்டித்த உலகத்தில்


 நான் ஒரு உலகை

சிருஷ்டித்து

அதில் வசித்து வருகிறேன்

இல்லை இல்லை

ஆழ்ந்த அமைதியோடு

அதில் ரசித்து

வாழ்ந்து வருகிறேன்..

அங்கே எல்லா ஜீவராசிகளும்

அமைதியாக தனது ஜீவனை

அடைக்கலமாக கொடுத்து

பேரமைதியோடு வாழ்ந்து

வருகிறது சத்தம் இல்லாமல்

ஒரேயொரு மனிதனின்

கெஞ்சல் தாங்காமல்

அங்கே வாழ அனுமதியளித்தேன்...

அங்கே வாழ்ந்த

மொத்த ஜீவராசிகளும்

கதறிக் கொண்டு

நிம்மதி இழந்து

கண்ணீர் வடித்து

என்னிடம் கெஞ்சியது...

அந்த ஒரு மனிதனை

வெளியேற்றி விடுகிறீர்களா

என்று...

நான் அந்த கதறலில்

கலங்கி போனேன்...

அவனை வெளியேற்ற

போராடிய போது

எனது அமைதியை

தொலைத்தேன்..

இங்கே மனிதர்கள் என்றாலே

சலசலப்பு தானே

நீ மட்டும் விதிவிலக்காக

எப்படி என்றது

அங்கே வாழ்ந்த ஜீவராசிகள்..

நான் கொஞ்சம் சிரித்து

சொன்னேன்...

நான் எங்கே மனிதன் என்று

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக