பக்கங்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2018

போலி சாமியார்கள்

அன்புடையீர் வணக்கம்.
         இப்போது நாம் பார்க்க இருப்பது போலி சாமியார்களை பற்றியது.இன்று மக்கள் எதை தின்றால் பித்தம் தீரும் என்ற மனப்பான்மமனப்பான்மையில் இருப்பதால் இந்த பிரச்சனை. அதற்கு அவர்கள் சூல்நிலையும் ஒரு காரணம் ஆகி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
       இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாவது உண்மையே.எவ்வளவோபேர் அடிப்படை தேவைக்காக தான் தினமும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மேல்நிலை அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தம் அவர்களை மிகுந்த மன உளைச்சளுக்கு தள்ளி விடுகிறது. இதனால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நாட்களில் அமைதியை வேண்டி ஆசிரமத்திற்கு செல்கிறார்கள்.
           அந்த ஆசிரமத்து நிர்வாகி இவர்களை சரியாக பயன்படுத்தி கொள்கிறார்.அதாவது ஒவ்வொரு கலையை கற்று தருவதாக சொல்லி அவர்களிடம் இருந்து பணம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்.எளிமையான யோகா பயிற்சிக்கு கூட கூடுதல் கட்டணம் செலுத்தி கற்று வருகிறார்கள் அப்பாவி மக்கள். இது நியாயமா என்பதை சுயபரிசோதனை அந்த ஆசிரம நிர்வாகிகள் செய்து கொள்ள வேண்டும்.
             நடுத்தர மக்கள் தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று இல்லை. பணம் படைத்த பலரும் இதற்கு விதிவிலக்கல்ல. மேலும் இந்த சாமியாரின் கொள்கை உயர்ந்தது .அந்த சாமியாரின் கொள்கை உயர்ந்தது என்று வேறு சண்டை. மேலும் போலி மரியாதை விரும்பிகளான மக்களில் சிலர் அவர் உருவபடத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறார்கள்.இது கொடுமையிலும் கொடுமை.வீட்டில் இருக்கும் பெற்றோரை ஒருசிறிதும் மதிக்காமல் இந்த போலி சாமியார்கள் பின்னால் அலைவதை பெருமையாக நினைக்கும் மூடர்கள்.
                   மக்களே உங்களுக்கு ஒன்று இந்த சமயத்தில் சொல்ல விழைகிறேன். நீங்கள் உண்மை எது போலி எது என்று கண்டுணர வேண்டும். அது கொஞ்சம் நீங்கள் சிரமப்பட்டால் எளிது.உண்மையான ஆன்மீகவாதிகள் தேவையில்லாத சத்தம் எழுப்புவதில்லை என்று சொல்வதைவிட சத்தமே எழுப்புவது இல்லை என்பதே உண்மை.
                   மதத்தின் பெயரால் சம்பாதிக்கும் மூடர்களை ஓரம் கட்டுங்கள். தயைகூர்ந்து எந்த மதமும் போலிகளை ஊக்குவிக்காதீர்கள்.போலிகள் எப்போதும் உண்மைத்தன்மையை பிரதிப்பலிப்பது இல்லை. உங்கள் சுயசிந்தனையை ஊக்குவியுங்கள்.போலிகளிடம் சிக்கி சீரழியாதீர்கள்.
                 கலியுகத்தில் நாம ஜபம் ஒன்றே போதும். பிறவி கடைத்தேற.நல்ல உபன்யாசம் வீட்டில் இருந்தபடியே கேளுங்கள்.வேலுக்குடி கிருஷ்ணர் உபன்யாசம் போல.போலி மதவாதிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருங்கள். நமது ஸனாதன தர்மம் ஆத்திகன் நாத்திகன் என்று எவரையும் பிரிக்கவில்லை.ஆத்திகவாதி இறைவனை நம்பி காரியத்தில் இறங்குகிறான்.நாத்திகவாதி கர்மயோகத்தை மட்டுமே உண்மை என நம்புகிறான்.அதையும் கீதையில் கிருஷ்ணர் யோகம்
என்என்று தானே சொல்லுகிறார்.பிறகு ஏன் நாத்திகவாதிகளை தூற்றுகிறீர்கள்.அவன் அவனை முழுமையாக நம்புகிறான் என்றால் என்ன அர்த்தம். அவன் தன்னையும் அறியாமலே உள்ளுக்குள் இருக்கும் பரமாத்தாவை கர்மயோகி செயல்களாக வழிபடுகின்றான்.
           அதனால் மக்களே நீங்கள் உங்களஉங்களை நம்புங்கள். தேவையில்லாத சஞ்சலங்களை குறையுங்கள். வார இறுதியில் காலாற பசுமை சூழ்ந்த இடங்களில் நடைபயிற்சி செய்யுங்கள். நல்ல இசையை கேளுங்கள்.அது எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை. அக்கம்பக்கத்தினருடன் நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம். நல்ல நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
       எந்த செயலையும் ரசித்து செய்யுங்கள். வார விடுமுறை நாட்களில் மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்த கலைகளில் ஈடுபடுங்கள் .அது எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். பிறகு பாருங்கள். எந்த ஆசிரமத்தையும் தேடாமலயே நீங்கள் மன அமைதி பெறுவதை காண முடியும்.
        மேலும் பேராசையை குறையுங்கள். அவசியம் இல்லாமல் கடனை தேடி தேடி வாங்காதீர்கள். எவ்வளவு ஆனந்தமான வாழ்க்கை உங்கள் முன்னால் உள்ளது என்று அப்போது நீங்கள் அறிவீர்கள். அப்போது ஆனந்தம் என்பது உங்களிடம் நிரந்தரமாக தங்கிவிடும் அதிசயத்தை உணர்வீர்கள். மேலும் எந்த சாமியாரையும் தேடி போலிகளிடம் மாட்டமாட்டீர்கள்.
      என்ன நேயர்களே நான் சொல்வது உண்மைதானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக