பக்கங்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2019

ஓஷோவின் பார்வையில் உயர் வேதம்

Listen to the most recent episode of my podcast: இரவுநேர இன்னிசை https://anchor.fm/elaiyaveni-k/episodes/ep-e8hb8e

எனது துரதிருஷ்டமே

பேருந்து பயணத்தில்
முன்னெச்சரிக்கையாக
கீழே விழாமல் இருக்க
எனது கைகள் இறுக்கமாக
பிடித்துக்கொள்ள
பிடிப்புகளை தேடியலைகிறது
இயல்பாக!
உன் காதல் எனும் வலையில்
விழாமல் இருக்க
எந்த பிடிப்பும் அப்போது
அகப்படாமல் போனது
எனது துரதிருஷ்டமே!

உன் கடுஞ்சினத்தை எதிர்கொள்ளும் விதம்

திருமண பந்தத்தில் நாம்
இணைந்தபோது
நீ நான் என்ன சொன்னாலும்
விழுந்து விழுந்து சிரித்த
அந்த நாட்களை நான்
தற்போது அடிக்கடி
நினைத்து கொள்கிறேன்
இப்போது!
நீ அடிக்கடி கடுஞ்சினம் கொண்டு
திட்டி தீர்த்தபோதெல்லாம்!

உன் நினைவு

என்றோ உன்னை காதலித்த
நினைவுகள் நான்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்ததும் ஏனோ
ஞாபக சாரலாக நனைக்க!
இன்று நீ எங்கே என்று
தேடுகிறேன்!
அந்த பேருந்து ஜன்னல்
வழியாக போவோர் வருவோரின்
முகத்தை உற்று உற்று பார்த்து!
எனக்கே என் செயல் மீது
வெட்கம் வந்து விட!
சுயநினைவுக்கு வந்து விட
செய்தது நான் இறங்கும்
பேருந்து நிறுத்தம்!

பழைய புத்தகங்கள்

இதோ இந்த பழைய
புத்தக கடையில்
இறந்தவர்களின் பொக்கிஷமான
நினைவுகளை தாங்கிய
புத்தகங்களும் ஏதோவொரு
மூலையில் தூசுகளோடே
துவண்டு கிடக்கலாம்!
அந்த நினைவலைகளை
வாங்கி செல்லவாவது
வாருங்கள் வாசிப்பாளர்களே!
அது வெறும் அச்சிடப்பட்ட
பேப்பர்கள் அல்ல!
அதை வாங்கியவுடன்
ஓர் அதிர்வலைகளை உங்களால்
உணர முடிந்தால் அந்த ஆன்மாவிற்கு
ஆனந்தத்தை தந்ததாக பொருள்!